Tuesday, February 1, 2011

கூகிளின் நிர்வாக மாற்றம். CEO ஆக Larry Page பதவியேற்பார்


இணையத்தில் முடிசூடா மன்னனாக திகழும் கூகிள் நிறுவனமானது தனது உயர்மட்ட முகாமையில் மாற்றம் ஒன்றை செய்யவிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த பத்துவருடமாக கூகிளின் CEO ஆக கடமையாற்றிய Eric Schmidt தனது கடமைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் Larry Page இடம் கையளிப்பார்.
Larry Page , Surgey Brin நண்பர்கள் கூட்டணியில் 1998 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட கூகிள் இணைய தளமானது தற்போது இணையத்தின் அனைத்து முக்கிய துறைகளிலும் தனது செல்வாக்கினை செலுத்திவருகிறது. இந்த கூட்டணிக்கு பக்கபலமாக இருந்து உயர்மட்ட முகாமைத்துவ கருமங்களில் இதுவரை காலமும் பதவிவகித்த Eric Schmidt அவர்கள் தனது கடமைகளினை Larry Page இடம் கையளித்துவிட்டு Executive Chairman ஆக
பதவியேற்கவுள்ளார்.
google ceo
Eric Schmidt தனது வலைப்பதிவில் Larry , Surgey இனுடைய எதிர்கால திட்டத்தினை இவ்வாறு வரையறுத்துள்ளார்,
Larry will now lead product development and technology strategy, his greatest strengths, and starting from April 4 he will take charge of our day-to-day operations as Google’s Chief Executive Officer. In this new role I know he will merge Google’s technology and business vision brilliantly. I am enormously proud of my last decade as CEO, and I am certain that the next 10 years under Larry will be even better! Larry, in my clear opinion, is ready to lead.
Sergey has decided to devote his time and energy to strategic projects, in particular working on new products. His title will be Co-Founder. He’s an innovator and entrepreneur to the core, and this role suits him perfectly.
இந்த மாற்றம் கூகிளின் செயற்பாடுகளில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தும்? Larry Page ன் முடிவுகள் எவ்வாறமையும்? காத்திருப்போம்.

No comments:

Post a Comment

More than a Blog Aggregator